Saturday 18 January 2014

யாழ்ப்பாணத்திலும் இளைஞர் யுவதிகள் படையில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்: யாழ்.கட்டளைத் தளபதி!

Saturday, January 18, 2014
யாழ். மாவட்­டத்தில் உயர் பாது­காப்பு வலயம் என்ற ஒரு இடம் இல்லை.  மக்­க­ளு­டைய காணிகள் படிப்­ப­டி­யாக அவர்­க­ளி­டமே ஒப்­ப­டைக்­கப்­படும் என யாழ். மாவட்ட இரா­ணுவக் கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரி­வித்தார்.

இதே­வேளைஇ யாழ் மாவட்ட இளைஞர் யுவ­தி­க­ளையும் விரைவில் இரா­ணு­வத்தில் இணைத்துக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட­ம­ராட்சி கிழக்கு வெற்­றி­லைக்­கேணி உண­வத்தை அம்மன் ஆல­யத்தில் நடை­பெற்ற விசேட பூசை வழி­பா­டு­களில் கலந்து கொண்ட பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்துத் தெரி­வித்த அவர்,

யாழ். மாவட்­டத்­தி­லுள்ள சிறிய இரா­ணுவ முகாம்­களைத் தற்­பொ­ழுது அகற்றி வரு­கின்றோம். இதேபோல் எதிர்­கா­லத்தில் மக்­க­ளு­டைய காணி­களில் அமைக்­கப்­பட்­டுள்ள முகாம்­க­ளையும் விடு­வித்து மக்­களை மீள்­கு­டி­யேற்­றவும் நட­வ­டிக்கை எடுப்போம். யாழ். மாவட்­டத்தைப் பொறுத்த வரையில் இங்கு இரா­ணு­வத்தின் அதி­யுயர் பாது­காப்பு வலயம் என்ற இடங்­க­ளாக எது­வு­மில்லை.
 
மக்­க­ளு­டைய காணி­களை படிப்­ப­டி­யாக விடு­விப்­ப­தற்கு இரா­ணு­வத்­தினர் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். மாவட்­டத்­தி­னு­டைய பாது­காப்­பிற்­கா­கவே இங்கு இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் மக்­க­ளு­டைய பாது­காப்­பினைக் கருத்தில் கொண்டு இரா­ணு­வத்­தினர் விசேட செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இருந்தாலும் நாம் மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்' எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment