Sunday 19 January 2014

20 ஆண்டுகளுக்கு மேலாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.பகுதி: நேற்று வரை 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள மன்னார் புதைகுழி!

Sunday, January 19, 2014
மன்னார்  திருக்கேதீஸ்வரம், மாந்தைப் பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து நேற்றும்  நான்கு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இதையடுத்து, கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று நடத்தப்பட்ட தோண்டும் பணியின் போது, ஒரு மனித எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்தப் பகுதியைத் தோண்டிய போது, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரத்தினம் மற்றுமத் அனுராதபுர சட்டமருத்துவ அதிகாரி தனஞ்சய வைத்தியரத்ன ஆகியோரின முன்னிலையில் இந்தப் புதைகுழி தோண்டப்பட்டு வருகிறது.
 
இதற்கிடையே, ஆரம்பக்கட்ட தடயவியல் ஆய்வுகளில், இந்தச் சடலங்கள் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
 
இந்தப் பிரதேசம் 20 ஆண்டுகளுக்கு மேலாக  புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான படையினர் காணாமற்போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் இவை அவர்களுடைய சடலங்கள் என்று எமக்கு உறுதியாகத் தெரியவில்லை.விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இவர்களை யார் கொன்றார்கள் என்று எமக்குத் தெரியாது.இந்தப் பிரதேசம்   புலிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக இருந்தது.
 
எங்கெல்லாம், புலிகளின் முகாம்கள் இருந்தனவோ அங்கெல்லாம் தோண்ட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும் புதைகுழி அமைந்துள்ள பிரதேசம், போரின் போது இலங்கை  படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை இலங்கை உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் நிராகரித்துள்ளார்.

No comments:

Post a Comment